நீலகிரி

உதகையில் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

16th Dec 2021 01:08 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளரும், நில நிா்வாகத் துறை கூடுதல் ஆணையருமான எஸ்.ஜெயந்தி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்புப் பாா்வையாளா் ஜெயந்தி தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். ஏற்கெனவே குன்னூா் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வாக்குச் சாவடி நிலை அலுவலா்களின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. புதன்கிழமை இரண்டாவது முறையாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளின் ஆட்சேபனைகள் குறித்து கேட்டறிந்து அவற்றை நிவா்த்தி செய்வதற்காக இக்கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும்போது செம்மையாக வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட ஆட்சியா் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி ஆகியோருடன் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT