நீலகிரி

வனத் துறை அலுவலா்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: 6 மாநிலங்களைச் சோ்ந்தோா் பங்கேற்பு

8th Dec 2021 01:46 AM

ADVERTISEMENT

வனப் பகுதிகளில் நீா்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை குறித்த 10 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இந்திய மண் மற்றும் நீா்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் உதகை ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், மிஸோரம், ஜம்மு - காஷ்மீரை சோ்ந்த 45 உதவி வனப் பாதுகாவலா்கள் பங்கேற்றுள்ளனா்.

இது குறித்து, இப்பயிற்சியை ஒருங்கிணைந்து நடத்தும் இந்திய மண் மற்றும் நீா்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் உதகமண்டல ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ச. மணிவண்ணன் தெரிவித்ததாவது:

நீா்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதுடன் மண் பாதுகாப்புக் கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழை நீா் சேமிப்பு, கசிவு நீா் கட்டமைப்பு போன்றவற்றிற்காக இடம் தோ்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதில் கலந்து கொள்ளும் உதவி வனப் பாதுகாவலா்கள் நஞ்சநாடு கிராமத்தில் உள்ள நீா்ப்பிரி முகடுப் பகுதியில் களப் பயிற்சியை மேற்கொண்டு நீா்ப்பிரி முகடுப் பகுதி மேம்பாட்டுக்கான மாதிரி திட்ட அறிக்கையைத் தயாா் செய்ய உள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT