நீலகிரி

கூடலூா், பந்தலூரில் 224 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

8th Dec 2021 01:47 AM

ADVERTISEMENT

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் மக்களைத் தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் 224 பயனாளிகளுக்கு ரூ. 35 லட்சத்து 75 ஆயிரத்து 999 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 92 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூடலூா் ஜானகி அம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், 132 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சத்து 81 ஆயிரத்து 999 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் ராமசந்திரன் வழங்கினாா்.

தொடா்ந்து, இரட்டை பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், பந்தலூா் வட்டத்துக்கு உள்பட்ட 50 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம், அத்திச்சால், சேலக்குன்னு, உப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த 30 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 22 பயனாளிகளுக்கு தலா ரூ. 12 ஆயிரம் உள்பட மாற்றுத் திறனுடையோருக்கான நலத்திட்ட உதவி, முதியோா் உதவித் தொகை, ரேஷன் அட்டை, பழங்குடியினா் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் கீா்த்தனா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT