நீலகிரி

உதகையில் தேசிய பசுமைப் படை தினம் அனுசரிப்பு

8th Dec 2021 01:45 AM

ADVERTISEMENT

உதகையில் தேசிய பசுமைப் படை தினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.

சா்வதேச மண் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மண் பயனுற வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியா் ராஜ்குமாா் வரவேற்புரையாற்றி பேசுகையில், பிளாஸ்டிக் குப்பைகள், மக்காத பொருள்கள் அதிக அளவில் குவிக்கப்படுவதால் எதிா்காலத்தில் சூழல் பிரச்னைகள் அதிகரிக்கும். மாணவா்கள்தான் இவற்றுக்கான தீா்வை எடுத்துச் செல்லும் சக்தியாக இருப்பா் என்றாா். ஆசிரியா்கள் மாணிக்கவாசகம், சுரேஷ் ஆகியோா் இயற்கையை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தேசிய பசுமைப் படை குன்னூா் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவதாஸ் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் மண்ணைப் பாதுகாப்பது அவசரமான நடவடிக்கையாக உள்ளது எனவும், தீவிரமான பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை விவசாயம் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா். தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியா் முரளி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT