நீலகிரி

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

8th Dec 2021 01:45 AM

ADVERTISEMENT

உதகையில் நடைபெற்ற சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 70 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சா் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை தொடா்ந்து இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தோ்வு செய்யப்பட்டு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

திமுக பொறுப்பேற்றது முதல் இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 383 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 463 மாற்றுத் திறனாளிகளுக்கு நல வாரிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து, 9 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6.88 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.16 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரிவோருக்கான வங்கிக் கடன் மானியம், 11 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.5 லட்சம் மதிப்பிலான சுயதொழில் துவங்குவதற்கு வங்கிக் கடன் செயல்முறை ஆணை, மனவளா்ச்சி குன்றிய 6 பேருக்கு ரூ.18,000 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைக்கான ஆணை, கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் 7 பேருக்கு ரூ.21,000 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ஆணை ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக, உதகை அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த செவித் திறன் குறையுடையோருக்கான யோகாசன நிகழ்வையும், கோத்தகிரி காதுகேளாதோருக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தின் சாா்பில் திருக்குறள் ஒப்பித்தலையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT