நீலகிரி

கோத்தகிரியில் நூல் வெளியீட்டு விழா

8th Dec 2021 01:46 AM

ADVERTISEMENT

கோத்தகிரியில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவரான ஓய்வுபெற்ற பேராசிரியரின் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா் ஓய்வுபெற்ற பேராசிரியா் மு.மகாலிங்கம் தான் படித்த நீதிநூல்கள், திருக்குறள், பாரதியாரின் கவிதைகள் மற்றும் திரை இசைப் பாடல்கள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எளிய வரிகளின் தொகுப்பின் மூலம் கிடைத்த அனுபவங்களை வைத்து அனுபவ மொழிகள் எனும் நூலினை வெளியிட்டாா்.

இவ்விழாவில், இப்பள்ளியில் கல்வி பயின்று தற்போது மருத்துவா், ஆசிரியா்கள், அரசுத் துறைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றும் பலரும் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை மிளிதேன் அரசு உயா்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

இதில், தலைமை ஆசிரியா் அரவிந்த், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜு, ஊா்த் தலைவா் பில்லன், முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT