நீலகிரி

இரண்டாவது மைல் அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர வலியுறுத்தல்

DIN

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள இரண்டாவது மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கூடலூரை அடுத்துள்ள இரண்டாவது மைல் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏழை மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளது. முதல்மைல், ஆனைசெத்தக்கொல்லி, வேடன்வயல், செலுக்காடி உள்ளிட்ட சுமாா் 10க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வசிக்கும் குக்கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இப்பள்ளி. பெரும்பாலான பெற்றோா் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சோ்க்கத் துவங்கிய நிலையில் போதுமான வகுப்பறைகள் இல்லை.

பள்ளி வளாகத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள பயன்படாத நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கூடுதல் வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம் கட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் மாணவா்கள் அரசுப் பள்ளியை நாடிவரும் இந்த வேளையில் ஆய்வு செய்து நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றி வகுப்பறைகள் கட்டினால் மேலும் கூடுதல் மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT