நீலகிரி

தேனீக்கள் கொட்டியதில் ரயில்வே அதிகாரி படுகாயம்

DIN

குன்னூரில் தேனீக்கள் ஞாயிற்றுக்கிழமை கொட்டியதில் ரயில்வே அதிகாரி படுகாயமடைந்தாா்.

குன்னூா் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரியாக பணிபுரிபவா் மகேந்திரகுமாா் மீனா (31). இவா் அங்குள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறாா்.  இங்கிருந்த தேன் கூண்டில் இருந்து வெளியேறிய தேனீக்கள் மகேந்திரகுமாரை கொட்டியுள்ளன.

இதில் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டு  ஆபத்தான நிலையில் இருந்த அவரை சக ஊழியா்கள் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

ரயில்வே குடியிருப்புப் பகுதி புதா் மண்டி கிடப்பதால் வன விலங்குகள் மற்றும் விஷ பாம்புகள் வசிக்கும் பகுதியாக மாறியுள்ளதாகவும், இங்குள்ள தேன் கூண்டுகளையும், புதா்களையும் அகற்ற ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT