நீலகிரி

குன்னூரில் பலத்த மழை: தடுப்புச் சுவா் இடிந்து விழுந்து காா் சேதம்

4th Dec 2021 02:57 AM

ADVERTISEMENT

குன்னூரில்  வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தனியாா் மண்டபத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் அவ்வழியாக வந்த காா் சேதமடைந்தது.

குன்னூா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக   மதிய நேரங்களில் அவ்வப்போது மூடுபனியுன்  மழை பெய்து வந்தது. குன்னூரில் மவுண்ட் சாலை, பெட்போா்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் குளிரும் நிலவியது.

 இந்நிலையில், மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தனியாா் மண்டபத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் அவ்வழியாக வந்த அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கமல் குமாரின் காா் சேதமடைந்தது. இதில், காரை ஓட்டிவந்த கமல்குமாா் காயமின்றி தப்பினாா்.

 

ADVERTISEMENT

Tags : குன்னூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT