நீலகிரி

கூடலூா்- கேரள இடையே பேருந்துப் போக்குவரத்து துவக்கம்

2nd Dec 2021 08:41 AM

ADVERTISEMENT

தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையே பயணிகள் பேருந்துப் போக்குவரத்து புதன்கிழமை துவங்கியது.

கரோனா பெருந்தொற்று தொடங்கிய காலம் முதல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கூடலூா்-கேரளம் இடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மண்ணா பகுதியிலிருந்து அம்மாநிலத்தின் இரண்டு அரசுப் பேருந்துகள் கூடலூருக்கு புதன்கிழமை இயக்கப்பட்டன.

கூடலூா் வந்தடைந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநா்களுக்கு அப்பகுதியில் உள்ள வாடகை காா், ஆட்டோ ஓட்டுநா்கள் வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT