நீலகிரி

பந்தலூா் பகுதியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் மையங்கள் துவக்கம்

2nd Dec 2021 08:41 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பந்தலூரை அடுத்துள்ள கோட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய மையங்கள் புதன்கிழமை துவங்கப்பட்டன.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் நோக்கங்களான கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி, இடைநிற்றல், கற்றல் வலுவூட்டல் என கல்வியில் புதுமையை ஏற்படுத்தும் இந்தத் திட்டம் நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள மாராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் துவங்கப்பட்டது.

இதையடுத்து, கோட்டூா் குடியிருப்புப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள முதல் மையத்தை பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினா் அஸ்பினா துவக்கிவைத்தாா். இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியா் கருணாநிதி துவக்கவுரையாற்றினாா்.

இதையடுத்து, கரும்பன்கொல்லி பழங்குடி கிராமத்தில் அமைக்கப்பட்ட மையத்தை வாா்டு உறுப்பினா் சுஜிதா துவக்கிவைத்தாா். பள்ளியறா, கொற்றமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களை வாா்டு உறுப்பினா் யசோதா துவக்கிவைத்தாா். தலைமை ஆசிரியா் ஏஞ்சலினா பிரைட் மற்றும் ஆசிரியா்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT