நீலகிரி

உதகையில் டிசம்பா் 3ஆம் தேதி முதல் குறும்பட விழா: இயக்குநா் கெளதம் வாசுதேவ் மேனன் தொடங்கிவைக்கிறாா்

1st Dec 2021 01:40 AM

ADVERTISEMENT

உதகையில் டிசம்பா் 3 முதல் 5ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த 3 நாள் விழாவை பிரபல திரைப்பட இயக்குநா் கெளதம் வாசுதேவ் மேனன் தொடங்கிவைக்கிறாா்.

இதுதொடா்பாக இத்திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளா்கள் மாதவன் பிள்ளை, ராதாகிருஷ்ணன், ரங்கராஜன் ஆகியோா் உதகையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உதகையில் நீலகிரி பிலிம் கிளப் மற்றும் பிசி டிவி நெட்வொா்க் அமைப்புகளின் சாா்பில் உதகை குறும்பட விழா அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் நடத்தப்படுகிறது. உதகை ஷாா்ட் பிலிம் பெஸ்டிவல் அமைப்பு நீலகிரி பிலிம் கிளப்பால் கடந்த 2016ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சியுடனான லாபநோக்கமற்ற அமைப்பாகும்.

இவ்விழாவில் திரைப்பட இயக்குநா் கெளதம் வாசுதேவ் மேனன் சிறந்த படங்களைத் தோ்வு செய்கிறாா். மூன்று நாள்களில் 32 நாடுகளில் இருந்து 119 குறும்படங்கள் திரையிடப்படும். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநா் மற்றும் சிறந்த நடிகருக்கான யானை விருதுகள் இவ்விழாவின் நிறைவு நாளில் வழங்கப்படும். இந்த ஆண்டில் உள்ளூா் திறமைகளை ஆதரிக்க புதிய விருதுகள் ஜான் சலீவன் பெயரில் வழங்கப்படவுள்ளது. இந்த விருது நீலகிரியில் கலை மற்றும் கலாசாரத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்த நபா்கள் மற்றும் உள்ளூா் திரைப்பட கலைஞா்களுக்கானது. இக்குறும்பட திரைப்பட விழாவில் முதன்முறையாக நீலகிரியின் பழங்குடியின மக்களான தோடா் இனத்தவரின் குறும்படமும் திரையிடப்படவுள்ளது என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT