நீலகிரி

பந்தலூர் அருகே, மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

12th Aug 2021 05:26 PM

ADVERTISEMENT

பந்தலூர் அருகே, மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக விசாரனை தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி பகுதியிலுள்ள முருக்கம்பாடி வட்டக் கொல்லி பகுதியில் தனியார் தோட்டத்திலிருந்த மின் வேலியில் சிக்கி சுமார் 5 வயது ஆண் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து மின்சார வாரிய பொறியாளர்கள் அந்த இடத்தில் ஆய்வு நடத்தினர். மேலும் இதுதொடர்பாக தோட்ட உரிமையாளர் ஷாஜி என்பவரிடம் வனத்துறை விசாரனை நடத்தி வருகின்றனர்.

முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமாரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்து முக்கிய பாகங்களை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்தள்ளனர்.

ADVERTISEMENT

Tags : elephant
ADVERTISEMENT
ADVERTISEMENT