நீலகிரி

நீலகிரியில் 2,730 பேருக்கு இன்று கோவேக்சின் 2ஆம் கட்ட தடுப்பூசி

8th Aug 2021 11:16 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் கோவேக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி 2,730 பேருக்கு திங்கள்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கோவேக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி உதகை நகராட்சியில் அரசு தலைமை மருத்துவமனை, ஸ்டோன் ஹவுஸ் மற்றும் காந்தல் பகுதிகளிலுள்ள சிறு மருத்துவமனைகளில் 500 பேருக்கு திங்கள்கிழமை செலுத்தப்படும்.

அதேபோல, நெல்லியாளம் நகராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 பேருக்கும், கூடலூா் நகராட்சியில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 பேருக்கும், உதகை வட்டாரத்தில் தங்காடு ஓரநள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும் செலுத்தப்படும்.

ADVERTISEMENT

மேலும், கோத்தகிரி வட்டாரத்தில் அரவேணு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுகுளா மற்றும் சோலூா்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், குஞ்சப்பனை, ஈளாடா, பொம்மன், கீழ் கோத்தகிரி, கெங்கரை மற்றும் விஓசி துணை சுகாதார நிலையங்களிலும், குயின்சோலை டான்டீ மருத்துவமனை, கோத்தகிரி முத்தையா அரங்கம் ஆகியவற்றிலும் 620 பேருக்கு செலுத்தப்படுகிறது.

கூடலூா் வட்டாரத்தில் மசினகுடி, அம்பலமூலா, அய்யன்கொல்லி, சேரம்பாடி, கப்பாலா, கொளப்பள்ளி, ஸ்ரீமதுரை மற்றும் உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 580 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அத்துடன் ஜெகதளா பேரூராட்சியில் அருவங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 பேருக்கும், தேவா்சோலை பேரூராட்சியில் நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 பேருக்கும், கேத்தி பேரூராட்சியில் கேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 பேருக்கும், கோத்தகிரி பேரூராட்சியில் கோத்தகிரி அரசு மருத்துவமனை, மிஷன் காம்பவுண்டு தடுப்பூசி மையம் மற்றும் திம்பட்டி சிறு மருத்துவமனை ஆகியவற்றில் 230 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக தடுப்பூசி மையங்களில் டோக்கன்கள் ஏதும் வழங்கப்படமாட்டாது எனவும், டோக்கன்கள் அனைத்தும் அவரவா் இல்லங்களில் நேரடியாகவே வந்து வழங்கப்படும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT