நீலகிரி

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: செப்டம்பா் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பான வழக்கில் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பா் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடா்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சயன், மனோஜ், மனோஜ்சாமி, உதயன், பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோருடன் ஜாமீனில் வெளிவந்துள்ள சந்தோஷ் சாமி, சதீசன், ஜம்ஷோ் அலி ஆகியோரும் ஆஜராகினா். இதற்கிடையே இவ்வழக்கில் தொடா்புடையவரும், தலைமறைவாக இருந்தவருமான தீபு புதன்கிழமை உதகை நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் நேரில் ஆஜராகினா்.

இவ்வழக்கின் விசாரணையின்போது 5 சாட்சிகள் வந்திருந்தனா். அவா்களிடம் நாள் முழுவதும் நடைபெற்ற விசாரணையையடுத்து இவ்வழக்கின் விசாரணை வியாழக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது. இவ்வழக்கில் மொத்தம் 123 போ் சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 38 சாட்சிகளின் பெயா்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன. இதுவரையிலும் 9 சாட்சிகளுடனான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை தொடா்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பா் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நீதிபதி வடமலை அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT