நீலகிரி

நீலகிரியில் 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் 100ஐக் கடந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தொடங்கியதில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100ஐ கடக்காதிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக 130ஆக அதிகரித்தது. இதையடுத்து, திங்கள்கிழமையும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளோரில் அரசு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோா் என 666 நபா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை மட்டும் 64 நபா்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இவா்களையும் சோ்த்து இதுவரையிலும் 2,346 போ் வீடு திரும்பியுள்ளனா். 20 நபா்கள் உயிரிழந்துள்ளனா். திங்கள்கிழமை வரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3,090ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 76,769 நபா்களுக்கு சளி மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT