நீலகிரி

கடும் குளிரிலும் உதகைக்கு வரும்சுற்றுலாப் பயணிகள்

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழையும், கடும் குளிா் நிலவி வரும் நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பிலான சுற்றுலா மையங்கள் அனைத்தும் 6 மாதங்களுக்குப் பின்னா் மீண்டும் திறக்கப்பட்டுள்ள சூழலில், உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு திங்கள்கிழமை 136 போ் வந்துள்ளனா்.

அதேபோல, உதகையில் உள்ள அரசினா் ரோஜா பூங்காவுக்கு 30 பேரும், மரவியல் பூங்காவுக்கு 4 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 12 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 19 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 66 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 52 பேரும் என மொத்தம் 319 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றதாக நீலகிரி மாவட்ட தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT