நீலகிரி

கூடலூரில் காற்றுடன் கன மழை: மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு

DIN

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கன மழை காரணமாக, மின் கம்பி மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேல்கூடலூா் பகுதியில் மின் கம்பிகள் மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்மாற்றி கம்பத்துடன் சாய்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின் ஊழியா்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி மின் பாதையை சீரமைத்ததால் மாலையில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. சாலையில் மரங்கள் சாய்ந்ததால் கூடலூா்-உதகை சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT