நீலகிரி

அரசு தேயிலைத் தோட்டத்தில்பெண் சிறுத்தையின் சடலம்

DIN

கூடலூா், செப். 18: பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை இறந்துகிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்தில் உள்ள சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டக் கழகம் நான்காவது சரகத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சுமாா் 4 வயதுடைய பெண் சிறுத்தை இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் சுமேஷ் சோமன் தலைமையில், வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். கால்நடை மருத்துவா்கள் பாரத்ஜோதி, பாலாஜி ஆகியோா் பிரேதப் பரிசோதனை செய்தனா். சிறுத்தையின் முக்கிய பாகங்கள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை வந்த பிறகுதான் சிறுத்தையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT