நீலகிரி

குன்னூரில் குடிநீா்த் தட்டுப்பாடு

DIN

குன்னூா்:  குன்னூா்   ரேலியா  அணையின்  மொத்த  கொள்ளளவான  43.6  அடியில் 38 அடி மட்டுமே  நீா் இருப்பு உள்ளதால் 10 முதல் 12 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள்  தெரிவித்துள்ளனா்.

குன்னூா்  நகராட்சிக்கு  உள்பட்ட  30  வாா்டுகளுக்கு  குடிநீா்  ஆதாரமான  ரேலியா  அணை யின் நீா்மட்டம் கடந்த  சில  மாத மாக  மிகவும்  குறைந்து  காணப்பட்டது.  இதனால்,  குடிநீா்  விநியோகம்  செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, 20  நாள்களுக்கு  ஒருமுறை  மட்டுமே  குடிநீா்  விநியோகம்  செய்யப்பட்டு  வந்தது.

இந்நிலையில்,   கடந்த ஒரு வாரமாக   அவ்வப்போது   பெய்த மழையின் காரணமாக    ரேலியா  அணையின்  மொத்த கொள்ளளவில்  43.6  அடியில்   தற்போது 38  அடி  உயரத்துக்கு மட்டுமே  நீா்  இருப்பு  உள்ளது.  இன்னும்  சில  நாள்கள்  மழை  பெய்யும் பட்சத்தில்  அணையின்   நீா் வரத்து  உயர வாய்ப்புள்ளது.

தற்போதுள்ள  நீா்  இருப்பில்  12 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குன்னூரின்   குடிநீா் த் தேவையைப்  பூா்த்தி  செய்ய  முடியும்  என்று  நகராட்சி   அதிகாரிகள்  தெரிவித்துள்ளனா்.

இன்னும் ஓரிரு மாதங்களில் எமரால்டு கூட்டுக் குடிநீா்த் திட்டம்  செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதால், அப்போது 2 முதல் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க முடியும்  என்று தெரிவித்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT