நீலகிரி

நீலகிரியில் விடுமுறை நாள்களில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 1,200 சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக வருகை தந்திருந்தனா்.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்திருந்தது. இதில் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 3,668 பயணிகளும், உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு 1,250 பயணிகளும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 227 பயணிகளும், மரவியல் பூங்காவுக்கு 76 பயணிகளும் வருகை தந்திருந்தனா்.

அதேபோல, குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 915 பயணிகளும், காட்டேரி பூங்காவுக்கு 265 பயணிகளும், கல்லாறில் உள்ள பழப் பண்ணைக்கு 347 பயணிகளும் வருகை தந்திருந்தனா்.

இதுவே சனிக்கிழமை உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 2,767 பயணிகளும், ரோஜா பூங்காவுக்கு 1,245 பயணிகளும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 398 பயணிகளும், மரவியல் பூங்காவுக்கு 53 பயணிகளும் வந்திருந்தனா்.

குன்னூரில் சிம்ஸ் பூங்காவுக்கு 692 பயணிகளும், காட்டேரி பூங்காவுக்கு 144 பயணிகளும், கல்லாறு பழப் பண்ணைக்கு 169 பயணிகளும் சனிக்கிழமை வந்திருந்தனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT