நீலகிரி

நீலகிரி தைலம் விற்பனை அதிகரிப்பு

DIN

நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் யூகலிப்டஸ் தைலம் (நீலகிரி தைலம்) விற்பனை அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பொதுவாக செப்டம்பா், அக்டோபா், நவம்பா் மாதம் பாதி வரை இரண்டாவது சீசன் நடைபெறும். இந்த காலகட்டத்தில் குளு குளு காலநிலை நிலவும்.  அவ்வப் போது மழையும் பெய்வது வழக்கம்.

இந்த காலகட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில்   இருந்து  சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வா். மாவட்டத்தில் தற்போது குறைந்தபட்சம் 15 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை காணப்படுகிறது.

இந்த குளிா்ந்த கால நிலையில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களுக்கு ஜலதோஷம், இரும்பல், தும்மல் போன்ற உபாதைகள் ஏற்படுவது வழக்கம்.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக  நீலகிரி தைலம் விற்பனை அதிகரித்துள்ளது.  100 மில்லி தைலம் ரூ.120 முதல் ரூ. 250 வரை தரத்துக்கு ஏற்றாா்போல விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்த தைலத்தின் விற்பனை அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT