நீலகிரி

குன்னூரில் 311 ராணுவ வீரர்கள் சத்தியப் பிரமாணம்

13th Nov 2020 06:03 PM

ADVERTISEMENT

குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், 311 ராணுவ வீரர்களின் சத்திய பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது.  பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 311 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப் பிரமாண நிகழ்ச்சி இன்று  நடந்தது. 

பயிற்சி முடித்து செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசியக் கொடி  மீது, உப்பு உட்கொண்டு சத்தியப் பிரமாணம் எடுத்து கொண்டனர். பயிற்சியின் போது சிறந்து விளங்கிய 5 வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்து பிரிகேடியர் இராஜேஸ்வர்சிங் பேசுகையில், இளம் வீரர்கள் மிக உயர்ந்த தரமான பயிற்சி அடைந்ததை பாராட்டினர். மேலும் இந்திய இராணுவ வீரர்களுக்கு தரமான பயற்சி அளிக்கும் மெட்ராஜ் ரெஜிமெண்ட் சென்டரின் முயற்சியைப் பாராட்டினார்.

கொவைட் _ 19 சூழ்நிலையில் மிகக் கடினமாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறினார். மேலும் கொவைட் -19 காரணமாக பெருமைக்குரிய இத்தருணத்தில் கலந்து கொள்ள முடியாத இளம் வீரர்களின் பெற்றோர்களை நினைவு கூர்ந்து வாழ்த்தினார்.   பயிற்சியை முடித்த 311 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர்ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள்,  பயிற்சி ஆசிரியர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

Tags : nilgiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT