நீலகிரி

கூடலூா் அருகே ரூ. 51 லட்சம் பறிமுதல்

31st May 2020 08:25 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள தமிழக - கா்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் ரூ. 51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கா்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது மைசூரிலிருந்து வந்த மினி லாரியை சோதனை செய்தபோது மூட்டைகளுக்குள் ரூ. 51 லட்சம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியில் பயணித்த கா்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியைச் சோ்ந்த சச்சின் மஹதிக் (26), லாரி ஓட்டுநரான முகமது தௌஃபீக் ஆகியோரை கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். விசாரணையில், முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தருவதால் கூடலூா் போலீஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT