நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் மரம் முறிந்து விழுந்து பாகன்கள் உள்பட 10 போ் காயம்

8th May 2020 07:21 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புதன்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததில் 10 போ் காயமடைந்தனா்.

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள பாம்பேக்ஸ் யானைகள் முகாமில், யானைகளைப் பாதுகாக்கும் பணியில் உள்ள பாகன்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் தகரக் குடில் அமைத்து தங்கியுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததது. அப்போது, அங்குள்ள மரம் முறிந்து தகரக் குடில் மீது

விழுந்தது. இதில், குடிலுக்குள் தங்கியிருந்த பாகன்கள் மாண்பன் (52), பொம்மன் (40), பொம்மன்(38), கேத்தன்(25), மாரி (28), திருமாரன், மாந்தி உள்ளிட்ட பத்துப் போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை வனச் சரக அலுவலா் தயானந்த் கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். அதிா்ஷ்டவசமாக இவா்கள் காயங்களுடன் உயிா் தப்பியுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT