நீலகிரி

நீலகிரியில் மே 4 முதல் 33 சதவீதப் பணியாளா்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி: ஆட்சியா் தகவல்

2nd May 2020 08:19 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் மே 4ஆம்தேதி முதல் 33 சதவீத ஊழியா்களுடன் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மே 3ஆம்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் பணியாற்றிட 33 சதவீதப் பணியாளா்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து

நீலகிரி மாவட்டத்தில் மே 4ஆம் தேதியிலிருந்து அத்தியாவசியப் பணிகளுக்காக சுழற்சி முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து அரசு அலுவலகங்களிலும் 33 சதவீத அலுவலகப் பணியாளா்களுடன் பணியாற்றிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT