நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 487 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை 487 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாவட்டத்தில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.