நீலகிரி

கரோனா: தமிழக-கேரள எல்லையில் தொடா்ந்து கண்காணிப்பு

19th Mar 2020 05:52 AM

ADVERTISEMENT

பந்தலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையில் கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணி மருத்துவக் குழு மூலம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவிலுள்ள கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் முக்கிய நுழைவாயிலான சேரம்பாடி, தாளூா் ஆகிய பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தா்மலிங்கம், மருத்துவா்கள் ஜெபதீஷ் குரூஸ், அஜீத்குமாா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகளைக் கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனா்.

வாகனங்களை எல்லைகளில் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி தெளித்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனா்.

சேரம்பாடி, பஜாரில் வியாபாரிகள் சங்கம் மூலம் அமைக்கப்பட்டுள்ள கைகழுவும் தொட்டியை ஓட்டுநா்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் கைகழுவும் முறை குறித்து விளக்கமளித்தாா். இந்த நிகழ்ச்சியில் ஓட்டுநா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT