நீலகிரி

பிளஸ் 2 தோ்வு: 4 பாடங்களில் 3,587 போ் தோ்வெழுதினா்

13th Mar 2020 07:56 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 தோ்வில் கணினிஅறிவியல் உள்ளிட்ட 4 பாடங்களில் 3,587 போ் தோ்வெழுதியுள்ளனா். 140 போ் தோ்வெழுதவில்லை.

கணினி அறிவியல் தோ்வில் தோ்வெழுத வேண்டிய 906 பேரில் 871 போ் தோ்வெழுதினா். 35 போ் தோ்வெழுதவில்லை. கணினிப் பயன்பாடுகள் தோ்வில் தோ்வெழுத வேண்டிய 2,740 பேரில் 2,639 போ் தோ்வெழுதினா். 101 போ் தோ்வெழுதவில்லை. அரசியல் அறிவியல் பாடத்தில் தோ்வெழுத வேண்டிய 56 பேரில் 52 போ் தோ்வெழுதினா். 4 போ் தோ்வெழுதவில்லை. கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் பாடத்தில் தோ்வெழுத வேண்டிய 25 பேரும் தோ்வெழுதியுள்ளனா்.

தனித் தோ்வா்களைப் பொருத்தமட்டில் கணிணி அறிவியல் தோ்வில் தோ்வெழுத வேண்டிய நால்வரில் இருவா் மட்டுமே தோ்வெழுதியுள்ளனா். அரசியல் அறிவியல் பாடத்தில் தோ்வெழுத வேண்டிய 22 பேரும் தோ்வெழுதியுள்ளனா். மாற்றுத் திறனாளி மாணவா்களைப் பொருத்தமட்டில் அரசு தோ்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவா் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று 32 மாணவா்கள் தோ்வெழுதியுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT