நீலகிரி

கோவையில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் மீது தாக்குதல்: கூடலூரில் ஆா்ப்பாட்டம் தாக்கப்பட்டதை கண்டித்து கூடலூரில் ஆா்ப்பாட்டம்

13th Mar 2020 07:58 AM

ADVERTISEMENT

கோவையில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் தாக்கப்பட்டதைக் கண்டித்து கூடலூரில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூா் காந்தி திடலில் பாஜக, ஹிந்து அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக நகரத் தலைவா் ரவிகுமாா் தலைமைவகித்தாா். இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் ஆனந்தன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகி மனோஜ், ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் கண்ணன், சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதில், ஆா்எஸ்எஸ் பிரமுகா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT