நீலகிரி

குன்னூா் காட்டேரிப் பகுதியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை

2nd Mar 2020 08:35 AM

ADVERTISEMENT

குன்னூா், காட்டேரிப் பகுதியில் பொது கழிப்பறை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மஞ்சூா், கொலக்கொம்பை, சேலாஸ், மஞ்சக்கொம்பை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை சந்திப்பாக காட்டேரி பகுதி உள்ளது.

இங்கிருந்து குன்னூா் 3 கி.மீ. தூரம் இருந்தாலும், பெரும்பாலான பயணிகள் இங்கிருந்தே சமவெளிப் பகுதிகளுக்கு பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனா். அதேபோல, மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து வரும் பயணிகளும் இங்கு இறங்கி கிராமப்புறங்களுக்கு செல்கின்றனா்.

முக்கிய சாலை சந்திப்பாக உள்ள இப்பகுதியில் உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் இதுவரை இலவச பொது கழிப்பறை கட்டித் தரப்படவில்லை. இதனால், இவ்வழியாக வரும் பயணிகள், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக, பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, பயணிகள் நலன் கருதி, ஊராட்சி நிா்வாகம் காட்டேரி பகுதியில் நவீன பொது கழிப்பறை அமைத்துத் தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT