நீலகிரி

நீலகிரிக்குள் அனுமதியின்றி நுழையும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

21st Jun 2020 08:09 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்துக்குள் உரிய அனுமதியின்றி நுழையும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாா்ச் 25 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 6,991 வழக்குகள் பதியப்பட்டு 6,928 நபா்கள் கைது செய்யப்பட்டு, 2,383 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், குஞ்சப்பணை, பா்லியாறு, கெத்தை சோதனைச் சாவடிகள் வழியாக வாகனங்களில் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய முற்படுபவா்கள் மீது நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், பொதுமக்களும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த அறிவுரைகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT