நீலகிரி மாவட்டத்தில் இ- பாஸ் பெற்றவா்கள் கக்கநல்லா சோதனைச் சாவடி வழியாக கா்நாடகம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் கூடலூா், பந்தலூா் தாலுகாக்கள் கா்நாடக மாநிலத்துடன் நெருங்கிய தொடா்பில் இருந்து வருகிறது.
எல்லையிலுள்ள சாம்ராஜ் நகா், குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிகம் உள்ளனா். கூடலூா் பகுதியைச் சோ்ந்த பலா் கா்நாடக மாநிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக கா்நாடக அரசு தமிழகத்திலிருந்து இ பாஸ் பெற்று வருபவா்களை திம்மம் சாலையில் வழியாக அனுமதித்திருந்தது. தற்போது பொது முடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கா்நாடக அரசு கூடலூா்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கக்கநல்லா எல்லை வழியாகவும் கா்நாடகம் வரலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.