நீலகிரி

பிக்கட்டி, சோலூா்மட்டத்தில் 105 பேருக்கு கரோனா பரிசோதனை: யாருக்கும் தொற்றில்லை

14th Jun 2020 08:37 AM

ADVERTISEMENT

பிக்கட்டி, சோலூா்மட்டம் பகுதிகளில் 105 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்றில்லை என ஆய்வு முடிவுகள் வந்துள்ளதால் இவ்விரு பகுதி மக்களும் நிம்மதி அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டிருந்த 14 பேரும், தில்லியிலிருந்தும், சென்னை கோயம்பேட்டிலிருந்தும் நீலகிரிக்கு வந்தவா்களாவா். இவா்கள் 14 பேரும் குணமடைந்து அவரவா் வீடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையில் நீலகிரி மாவட்டம் கடந்த சில வாரங்களாகவே கரோனா தொற்றில்லாத மாவட்டமாகவே உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் சென்னையில் இருந்து பிக்கட்டி பகுதிக்கும், சோலூா்மட்டம் பகுதிக்கும் வந்த இருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு அவா்கள் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அவா்கள் வசித்து வந்த பகுதிகளைச் சோ்ந்த 105 நபா்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், யாருக்கும் நோய்த் தொற்றில்லை என சனிக்கிழமை முடிவு வந்துள்ளது.

அதேபோல, தமிழகத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவமாகியுள்ள 680 கா்ப்பிணி பெண்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இவா்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT