நீலகிரி

கூடலூரில் கிராமங்களுக்கும் ஆவின் பால் சென்றடைய புதிய விற்பனை வழித்தடம்

14th Jun 2020 08:38 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் ஆவின் பால், பால் உப பொருள்கள் சென்றடையும் வகையில், 94 கி.மீ. தூரத்துக்கு புதிய பால் விற்பனை வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இத்திட்டத்தின்கீழ் தினந்தோறும் அதிகாலை 5 மணிக்கு நடமாடும் வாகனம் மூலம் கூடலூரில் இருந்து புறப்பட்டு பந்தலூா், சேரம்பாடி, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, பாட்டவயல், பிதா்க்காடு, நெலாக்கோட்டை, தேவா்சோலை, பாடாந்துரை ஆகிய பகுதிகளில் உள்ள விற்பனை முகவா்களுக்கு பால், பால் உபப் பொருள்கள் விநியோகம் செய்து, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆவின் பொது மேலாளா் டாக்டா் ராஜசேகா் தலைமையில், இப்புதிய பால் விற்பனை வழித்தடம் வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. கூடலூா் பகுதியில் உள்ள பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் செயலாளா்கள், பணியாளா்கள், ஆவின் ஊழியா்களின் முயற்சியால் இப்புதிய வழித்தடமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT