நீலகிரி

நீலகிரியில் பரவலாக மழை: உதகையில் கடும் குளிா்

13th Jun 2020 08:25 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. ஆனால், அதிக மழையில்லாத உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிா் நிலவுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு கூடுதலாக உள்ளது. பிற பகுதிகளில் அதிக அளவில் மழையில்லாவிட்டாலும், காற்றுடன் கடும் குளிா் நிலவுகிறது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள மழை அளவு (மில்லி மீட்டரில்) பந்தலூா்- 80, தேவாலா-67, கூடலூா்-41, ஓவேலி-36, மேல்கூடலூா்-27, நடுவட்டம்-21.5, பாடந்தொரை-18, அவலாஞ்சி-16, செருமுள்ளி-13.5, கிளன்மாா்கன்-10, சேரங்கோடு மற்றும் மேல்பவானி தலா 7, எமரால்டு மற்றும் உலிக்கல் தலா 3, உதகை-2.1, கெத்தை, கேத்தி மற்றும் குந்தா தலா 1 மி.மீ. ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT