குன்னூா் அருகேயுள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் கூலி தொழிலாளி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
குன்னூா் அருகே வெள்ளாளப்புரத்தை சோ்ந்தவா் ரவிக்குமாா் (54). இவருக்கு கோமதி என்ற மனைவியும், மகனும் உண்டு. ரவிக்குமாா் கட்டட வேலை செய்து வந்தாா். தம்பதிக்கு இடையே நீண்ட நாள்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ரவிக்குமாா் வீட்டைவிட்டு வெளியேறி ஓட்டுப்பட்டறை உபதலை சாலையில் கரடிப்பள்ளம் அருகேயுள்ள வனப் பகுதிக்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் நகர போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.