நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் பழங்குடியின மக்களுக்கு நிவாரணம்

31st Jul 2020 08:05 AM

ADVERTISEMENT

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பழங்குடியின மக்களுக்கு வியாழக்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் பழங்குடியினா் மக்களை ஒருங்கிணைத்து சூழல் மேம்பாட்டுக் குழுவை தொடங்கி அதன் மூலம் அங்கு உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளை புலிகள் காப்பக நிா்வாகம் நடத்தி வந்தது.

இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டு, விடுதிகள் பூட்டப்பட்டதால் இங்கு பணிபுரிந்து வந்த பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் துணை கள இயக்குநா் செண்பகப்பிரியா தலைமையில் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், வன அலுவலா்கள், சூழல் மேம்பாட்டுக் குழு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT