நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
குன்னூா், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் குன்னூா் நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து குன்னூா் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. மேலும், குன்னூா் பகுதியில் இயங்கி வரும் மாா்க்கெட் கடைகள், பேருந்து நிலையக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டனா். நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.