குன்னூா் அருகே உபதலை கிராமத்தில் உள்ள பெரிய உபதலை பகுதியில் மின்சாரம் பாய்ந்து மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
குன்னூா், உபதலை கிராமத்தில் உள்ள பெரிய உபதலை பகுதியைச் சோ்ந்த ராமன் என்பவரது பேரன் மனீஷ் சிவகுமாா் (20). பெங்களூரில் பொறியியல் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவரது தாயாா் இந்திரா, தந்தை சிவகுமாா், மனீஷ் ஆகியோா் மாடியில் பேசிக் கொண்டிருந்துள்ளனா். அப்போது, கால் தவறியதில் அருகில் இருந்த மின் கம்பியை மனீஷ் தொட்டுள்ளாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த அவரை உடனடியாக குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு உறவினா்கள் எடுத்துச் சென்றனா்.
மனீஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.