கூடலூா் நகரின் மையப் பகுதியான கூடலூா் - உதகை சாலையில் மையப் பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் இந்தப் பள்ளம் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்தப் பள்ளம் சீரமைக்கப்படாமல் நீண்டகாலமாக விடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிா்வாகம் இந்தப் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.
ADVERTISEMENT