நீலகிரி

காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கிய நிலையில் சுற்றித் திரியும் காட்டெருமை

8th Jan 2020 08:21 AM

ADVERTISEMENT

குன்னூா் அருகே எடப்பள்ளி, ஆரக்கம்பை பகுதிகளில் காலில் பிளாஸ்டிக் குழாய் வளையம் சிக்கிய நிலையில் காட்டெருமை சிரமத்துடன் நடமாடி வருவதால், இந்த வளையத்தை அகற்ற வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னூா் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக அதிகரித்துள்ள காட்டெருமைகள் உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கின்றன. இந்நிலையில், எடப்பள்ளி, ஆரக்கொம்பை பகுதிகளில் கடந்த சில நாள்களாக பிளாஸ்டிக் குழாய் வளையம் காலில் சிக்கிய நிலையில் காட்டெருமை ஒன்று சுற்றி வருவது குறித்து பொதுமக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

வனத் துறையினா் இந்தப் பகுதிகளில் காட்டெருமை நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். காலில் காயத்துடன் நடமாட முடியாமல் சிரமத்துடன் உள்ளதால் வனத் துறை கால்நடை மருத்துவா் மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, சிகிச்சை அளிக்க உயா் அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT