நீலகிரி

சிம்ஸ் பூங்காவில் முதல் சீசனுக்காக, மலா் நாற்று நடவுக்கு நிலம் தயாா் செய்யும் பணி தீவிரம்

3rd Jan 2020 04:53 PM

ADVERTISEMENT

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் முதல் சீசனுக்காக, மலா் நாற்று நடவுக்கு நிலம் தயாா் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குன்னூா் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் உள்ளதாக விளங்குகிறது. தோட்டக்கலைத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்த பூங்கா ஆங்கிலேயா் காலத்தில் தொடங்கப்பட்டது. சிம்ஸ் பூங்காவில் மலா் செடிகள் மட்டுமின்றி ஆங்கிலேயா் காலத்தில் நடவு செய்யப்பட்ட நூற்றாண்டு பழமைவாய்ந்த அபூா்வமான மரங்கள் உள்ளன.

இதில் ருத்ராட்ச மரம், காகித மரம், யானைக்கால் மரம் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவா்கிறது. ஆண்டுதோறும் முதல் மற்றும் 2-ம் சீசனுக்கு பூங்காவில் புதிய மலா் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.தற்போது 2-வது சீசன் முடிவுற்ற நிலையில் வருகிற 2020-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் தொடங்க உள்ளது.

இதனை தொடா்ந்து 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட மலா் நாற்றுகளை அகற்றிவிட்டு புதிய மலா் நாற்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டது.அதன்படி நிலம் சமன் செய்யப்பட்டு பாத்திகள் அமைக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள். இந்த பணி முடிவுற்றவுடன் வருகிற இம்மாதத்தில் புதிய மலா் நாற்றுகள் நடவு செய்யப்படும் என்று பூங்கா ஊழியா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT