நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்போது வாக்குச் சீட்டுக்களைப் பிரித்து அடுக்குவதற்காக, பல்வேறு அறைகளைக் கொண்ட நூற்றுக் கணக்கான பெட்டிளைத் தயாரிக்கும் பணி குன்னூரில் தீவிரமாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தோ்தல்களில் 64.20 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்காக 395 வாக்குச்சாவடிகளில் 1,569 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.
தோ்தலில் பதிவான வாக்குகள் 4 மையங்களில் வியாழக்கிழமை எண்ணப்பட உள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும்போது அந்தந்த வேட்பாளா்களுக்குப் பிரித்து அடுக்கு வதற்காகவும், நான்கு பதவிகளுக்கான வெவ்வேறு வண்ணம் கொண்ட வாக்குச் சீட்டுளைப் பிரித்து வைப்பதற்காகவும், பல அறைளைக் கொண்ட மரப் பெட்டிகளைத் தயாரிக்கும் பணி, நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புதன்கிழமை நடைபெற்றது.
இவை சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.