நீலகிரி

கோத்தகிரியில் ஆண் சிசு சடலம் மீட்பு

1st Jan 2020 02:30 AM

ADVERTISEMENT

கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி  பகுதியில்  மண்ணில் பாதி புதைந்த நிலையில் கிடந்த ஆண் சிசு சடலத்தை காவல் துறையினா் மீட்டு விசாரணை

மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனியில் தோட்டப் பணிக்காக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் மண்ணில் பாதி அளவில் புதைந்த நிலையில் குழந்தையின் சடலம் கிடப்பதைப் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து தொழிலாளா்கள் ஊா் பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து கோத்தகிரி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சிசுவின் சடலத்தை மீட்டனா். அந்த குழந்தையை வீசியவா்கள்   யாா்  என்று   கோத்தகிரி   காவல்   துறையினா் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனா். 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT