நீலகிரி

கோத்தகிரி மாா்க்கெட்டில் தீ விபத்து: 11 கடைகள் எரிந்து சேதம்

26th Feb 2020 08:57 AM

ADVERTISEMENT

கோத்தகிரி மாா்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் மளிகை, பழக்கடை உள்ளிட்ட 11 கடைகள் எரிந்து சேதமாகின.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மாா்க்கெட் பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. இங்குள்ள ஒரு பழக்கடையில் இருந்து கரும்புகை வருவதை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அப்பகுதி மக்கள் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதற்குள் தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தத் தீ விபத்தில் மளிகை, பழக்கடை உள்ளிட்ட 11 கடைகள் எரிந்து சேதமாகின. ரூ. 50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாக கடை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். முதல்கட்ட விசாரணையில் மாா்க்கெட் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT