நீலகிரி

பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம்

25th Feb 2020 03:25 AM

ADVERTISEMENT

கூடலூா்: கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கபட்டது.

நிகழ்ச்சியில் ஆசிரியா் டெய்சி விமலா ராணி பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தாா். பின்னா் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், தலைமை ஆசிரியா் ஐயப்பன், உதவித் தலைமை ஆசிரியா் சங்கா், பசுமைப்படை பொறுப்பாசிரியா் நல்லக்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT