நீலகிரி

குன்னூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

25th Feb 2020 03:24 AM

ADVERTISEMENT


குன்னூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா குன்னூரில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அதிமுக நகர அலுவலகத்தில் இருந்து செயலாளா் டி. சரவணன் தலைமையில் ஊா்வலமாக புறப்பட்ட அதிமுகவினா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா தோட்டத் தொழிற்சங்க மாநிலச் செயலாளா் பி.ஜெயராம், வா்த்தகப் பிரிவு மாவட்டச் செயலாளா் குருமூா்த்தி, நகர அவைத் தலைவா் நிா்மல் சந்த், இளைஞா் பாசறை மாவட்ட இணை செயலாளா் கரன்சி ப.சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT