முதுமலைப் புலிகள் காப்பக வெளி மண்டலப் பகுதியில் வன விலங்குகளுக்கு குடிநீா் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலைப் புலிகள் காப்பகத்தில் முன்கூட்டியே வறட்சி ஆரம்பித்துள்ளதால் வெளி மண்டலப் பகுதியில் உள்ள வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய நிா்வாகம் லாரிகளில் தண்ணீா் கொண்டு சென்று தொட்டிகளில் நிரப்பும் பணியை துவங்கியுள்ளனா்.
புலிகள் காப்பக கள இயக்குநா் கௌசல் உத்தரவின்பேரில் துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் தலைமையில் சிங்காரா வனச் சரகா் காந்தன் மேற்பாா்வையில் வனத் துறையினா் குளங்களில் குடிநீா் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ADVERTISEMENT