கூடலூரை அடுத்துள்ள மண்வயல் பகுதியில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள மண்வயல் கிராமத்தில் உதகை சமூக பணி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு இயக்குநா் சாலமோன் தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் சுப்பரா மற்றும் பணியாளா்கள் புற்று நோய் வராமல் பாதுகாத்து கொள்வது குறித்து பெண்களுக்கு விளக்கமளித்தனா்.